கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

 கட்டுநாயக்க விமான நிலையத்தில், 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


 விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றபோது, ​​சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கனேடிய பிரஜை என தெரியவந்துள்ளது. 


ஹஷிஷ் பொட்டலங்கள்

 அவர் இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 




 சந்தேக நபரின் பயணப்பெட்டியில் 6 பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் 253 கிராம் எடையுள்ள 72 சிறிய ஹஷிஷ் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக விமான நிலையப் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form