வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம்..! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா வலியுறுத்தல்!

 தமது கிராமத்தில் எந்த பிரிவினைகளும் இல்லை. எனவே,வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் என இலங்கையின் ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திமா ஷாஃபியா யாமிக் வலியுறுத்தியுள்ளார்.


இந்தியாவின் ராஞ்சியில் அண்மையில் நடைபெற்ற, 2025 ஆம் ஆண்டின் தெற்காசிய தடகள செம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு சொந்த ஊரான கண்டியில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.


தனிப்பட்ட சாதனைகளில் ஒன்று

இதன்போது, பேசிய யாமிக், "எங்கள் கிராமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை," "முஸ்லிம், சிங்களம், தமிழ், பௌத்தர்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.




நான் பிறந்த நாளிலிருந்து அவர்களுடன் வளர்ந்தேன். எனவே, வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


26 வயதான யாமிக், பெண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஒட்டம் , 200 மீட்டர் அஞ்சல் ஒட்டம் மற்றும் 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் தங்கம் வென்று வரலாறு படைத்தார், மூன்றிலும் சாதனைகளையும் படைத்தார்.


அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.53 வினாடிகள், 200 மீட்டர் ஓட்டத்தில் 23.58 வினாடிகள் கடந்து, அஞ்சலோட்ட அணியை 44.70 வினாடிகளில் முடிக்க உதவினார் - இது பிராந்திய போட்டியில் இலங்கை தடகள வீராங்கனையின் மிகச்சிறந்த தனிப்பட்ட சாதனைகளில் ஒன்றாகும்.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form