அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்த ஸ்ரேயஸ்!!

 அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில், இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் பந்தை பிடித்த போது வயிற்றில் அடிபட்டுள்ள நிலையில் அவர் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளைாயாடுகின்றது

.இந்தியா-அவுஸ்திரேலியா

இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டதுஇந்தநிலையில் இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றுவருகின்றது.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணித்தலைவர் மிட்சல் மார்ஷ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது

..ஸ்ரேயஸ் ஐயர் 


இந்தப்போட்டியில் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயஸ் ஐயர் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக பந்தைப் பிடித்தார்.இதனால் ஸ்ரேயஸ் ஐயருக்கு வயிற்றில் அடிபட்டது. இதனை தொடர்ந்து வலிதாங்க முடியாமல் அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.

இதனைதொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் துடுப்பாட்டம் செய்ய வருவாரா மாட்டாரா என்பது அவரது காயத்தை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form