மும்பை ஏர்போட்டில் ஜோதிகா!! அவர் வைத்துள்ள ஹேண்ட் பேக் இத்தனை லட்சமா:!!

 நடிகை ஜோதிகா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஜோதிகா. பாலிவுட் படங்களிலும் நடித்த ஜோதிகா, தமிழில், விஜய், அஜித், சூர்யா, கமல், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையானார்.நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்துக்கொண்டார். இரு குழந்தைகளுக்கு தாயானப்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.




தென்னிந்திய படங்களை தாண்டி தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, மும்பையில் செட்டிலாகிவிட்டார். தற்போது மும்பை ஏர்போர்ட்டில் மேக்கப் இல்லாமல் மின்னும் அழகில் வந்துள்ளார்.தற்போது அவரின் ஹேண்ட்பேக் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜோதிகா வைத்திருக்கும் Celine பிராண்ட் ஹேண்ட்பேகின் விலை ரூ. 3,73,386 என்று கூறப்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form