மிளகாய்த் தூள் தூவி வயோதிபப் பெண் கொலை!!

 தனியாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர், தவறான நடத்தையால் துன்புறுத்தப்பட்டு முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண், மினுவாங்கொடை, யட்டியன பிரதேசத்தில் வசிக்கும் 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (24.10.2025) அயல் வீட்டில் வசிக்கும் பெண்ணொருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மிளகாய்த் தூள் முகத்தில் பூசப்பட்டு கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணை


அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட இந்தப் பெண் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மினுவாங்கொடை பதில் நீதவான் இந்திராணி ரத்நாயக்க சம்பவ இடத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்புமாறு காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form