இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ரஜமஹா விகாரையில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்!!

 வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 40 கிலோ எடையுடைய பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை உடைத்து உள்ளே இருந்த பெறுமதிமிக்க புத்தர் சிலையை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹியங்கனை ரஜமஹா விகாரையில் உள்ள சிசிரிவி கமராவில், இனந்தெரியாத இரண்டு நபர்கள் நள்ளிரவு 01.00 மணி அளவில் அருங்காட்சியகத்திற்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form