யாழின் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருக்கு உயரிய அங்கீகாரம்

 இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Categoryயில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது லண்டனில் நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு உலகின் 68 நாடுகளிலிருந்து பங்குபற்றிய திறமையான இளைஞர் போட்டியாளர்கள் மத்தியில் அனுசனின், சமூகத்தையும் சூழலையும் மேம்படுத்தும் முயற்சிகள் தனித்துவமாக வெளிப்பட்டது.   யாழ்ப்பாண கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம் கடற்கரை சூழலை மீட்பதோடு, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் அனுசன் முன்னெடுத்த முக்கியமான முயற்சியாகும்.   திட்டத்தின் மூலம் கடற்கரை கண்டல் தாவரங்கள் பாதுகாக்கப்பட்டதோடு, சமூகத்தினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, செயல்பாடுகளில் நேரடியாக பங்களித்துள்ளனர்.

இந்த சாதனை, இலங்கையின் பசுமை சூழல் மற்றும் சமூக நீடித்த வளர்ச்சியை உலகளாவிய அளவில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form