இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்!

 தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார்.


சமூக வலைதளங்களில் ஏற்படும் கவனச் சிதறல்கள் வீரர்களின் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை பாதிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தங்களது முழு கவனத்தையும் பயிற்சிக்கும், ஆட்டத்திற்கும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 


சில காலத்துக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருப்பது அவர்களின் கவனத்தை மீட்டெடுக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீரருக்கு சமூக வலைதளம் அவசியம் என்று தோன்றினால், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தான் சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, வீரர்களது கவனம் முழுவதும் ஆட்டத்திற்கான தயார்படுத்தல் மற்றும் ஆட்டத் திறமையிலும் இருக்க வேண்டும் என அதப்பத்து வலியுறுத்தியுள்ளார்.

மார்வன் அத்தபத்து 90 டெஸ்ட் மற்றும் 268 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து 14000த்திற்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களை குவித்துள்ளார்.

நாட்டின் மிகவும் ஒழுக்கமான மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் வீரர்களில் ஒருவராகவும் கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form