யாழில் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்
இவர் கடந்த 22ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மழை பெய்து கொண்டிருப்பதால் வெற்றிலை மென்று துப்புவதற்காக கட்டடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து இவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Tags
இலங்கை
