யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!

 யாழ் போதனா வைத்தியசாலையில்   ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில்  திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார்.

தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்

குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

திருமணமாகி  நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை குறித்த தாய் பெற்றெடுத்திருந்த நிலையில் குழந்தைகள் பிறந்த  ஒரேமாதத்தில் இத் துயரம் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில் நேற்றைய தினம் (5) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form