காலி - கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.
காலி்யிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த அச்சிறுவன் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் 11 வயதுடையவன் எனவும், கட்டுக்குறுந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு களுத்துறை தெற்குப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
இலங்கை
