இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள்.. சீரியல் நடிகை லட்சுமி ஆவேசம்!!

 பிக்பாஸ்

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதில் ஒளிபரப்பாகும் ஒரு மாஸான ஷோ தான் பிக்பாஸ்.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.


கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் ஒரே சண்டை தான்.

எந்த சீசனும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது

ஆவேசம்!   

இந்நிலையில், சீரியல் நடிகை லட்சுமி பிக்பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

அதில், " பிக்பாஸ் நிகழ்ச்சி கேவலத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறது. உங்கள் வீட்டு குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்களா இல்லையா, சிறிது அளவு சமூக அக்கறை இருக்கிறதா? உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள்.



அவர்களை வெளியே தூக்கி போட்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக ஒரு பாடலில் தவறான வரி இருந்தால் கூட மாதர் சங்கத்தினர் குற்றம் சாட்டுவர்.

ஆனால் இது போன்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் இவ்வளவு அசிங்கம் நடக்குது. இப்போ எங்கே சென்றார்கள். அசிங்கமா பேசுபவர்களை விஜய் சேதுபதி கன்ட்ரோல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.    .

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form