மகனுடன் வசித்து வந்த தாய்க்கு இரவில் அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்!

 மதவாச்சி - இசின்பெஸ்ஸகம பகுதியில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று (27) கொலை செய்யப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவர் மதவாச்சி - இசின்பெஸ்ஸகம பகுதியைச் சேர்ந்த 81 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கோடரியால் தாக்குதல் 


தனது மகனுடன், அவர் வீட்டில் வசித்துவந்த நிலையில், 26ஆம் திகதி இரவு அவரது தலையில் கோடரியால் தாக்கியதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form